எப்படி இதை மறந்தோம்… ???… !!! ( என் விருப்பம் -28 )


நேற்று எதேச்சையாக இந்த பாடலை கேட்க
நேர்ந்ததும் அசந்து விட்டேன்…
இவ்வளவு அழகிய,
இவ்வளவு இனிய,
இவ்வளவு பொருள் பொதிந்த –
இந்தப் பாடலை – இத்தனை நாட்களாக எப்படித்
தவற விட்டோம் நாம் என்று எனக்குள்ளேயே
கேட்டுக் கொண்டேன்.

சில சமயங்களில், சில திரைப்படங்கள் FLOP ஆகும்போது,
அதன் பாடல்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
பல் நல்ல பாடல்கள் இவ்வாறு பலியாகி இருக்கின்றன.
அவற்றில் இதுவும் ஒன்று

2005-ஆம் ஆண்டு – சூர்யா, ஜோதிகா நடித்து வெளிவந்த
“மாயாவி” என்கிற படம் தோல்வியடைந்ததன் விளைவு,
அதில் இடம் பெற்றிருந்த இந்த அருமையான பாடலும்
மறக்கப்பட்டு விட்டது…ஒருவேளை நான் இந்த படத்தை
பார்த்திருந்தாலாவது, இது நினைவில் நின்றிருக்கும்….

Anyway – இப்போது அந்த தவறை சரி செய்து விடலாமென்று
நினைக்கிறேன்…. இரண்டு வெவ்வேறு வடிவங்களில்
அதை பதிவு செய்து கேட்பதன் மூலம்.

வாழ்க்கையின் அருமையான தத்துவங்களை மிக
எளிமையான தமிழில் தந்திருப்பதற்காக இதை இயற்றிய
பாடலாசிரியர் பழனிபாரதியை இங்கே அவசியம்
பாராட்ட வேண்டும்…

( பாடலாசிரியர் பழனி பாரதி )

இனிய இசையமைப்புக்கு சொந்தக்காரர் –
தேவிஸ்ரீ பிரசாத்…(அவரது முதல் தமிழ்ப்படம் இது…!!!)

பாடியவர்கள் – SPB சரண், கல்பனா…

இனி பாடல் – முதலில் – அதன் கவிதை வரிகளை ரசிப்பதற்காக,
எழுத்து வடிவில்…

இங்கே அந்த பாடல் திரைப்படத்தில்
இடம் பெற்ற விதம் –

“கடவுள் தந்த அழகிய வீடு” பாடல் வரிகளை
முழுவதுமாக உணர்ந்து ரசிக்க – இங்கே வசன வடிவில் –

….

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு

கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்…
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ…..

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்

விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ

பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த..

நாம் எல்லாம் சுவாசிக்க – தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் – இடங்களை பார்த்து பொழியாது

கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்

வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்

முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே

கேளடி
கடவுள் தந்த அழகிய வாழ்வு.

.
———————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எப்படி இதை மறந்தோம்… ???… !!! ( என் விருப்பம் -28 )

 1. Subramanian சொல்கிறார்:

  அற்புதம் சார்.
  அழகான வார்த்தைகளில் வாழ்க்கையின் தத்துவங்கள்.
  கண்ணதாசனுக்குப் பிறகு இப்போது தான் பார்க்கிறென்..
  இதயத்தைப் பிழியும் மெல்லிசை.
  பழனி பாரதியோடு –
  இதை பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கும் சேர்த்து நன்றிகள்.

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! மாயாவி படத்தில் இந்த பாடலின் பாடலாசிரியர் — இசை அமைத்தவர் — பாடிவர்களை குறிப்பிட்டு விட்டு மனவளர்ச்சி குன்றியவர் பாத்திரத்தில் நடித்தவர் யார் என்று கூறாமல் விட்டால் எப்படி ..! நடித்தவர் : ” விஷ்ணு பிரியா ” என்கிற நடிகை … !
  // எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
  எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் … முடிவதும் பின்பு தொடர்வதும்
  இந்த வாழ்க்கை சொல்லும்
  பாடங்கள் தானே … // போன்ற வரிகள் கீதையை ஞாபகப்படுத்தும் …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   // அய்யா …! மாயாவி படத்தில் இந்த பாடலின்
   பாடலாசிரியர் — இசை அமைத்தவர் — பாடிவர்களை
   குறிப்பிட்டு விட்டு மனவளர்ச்சி குன்றியவர்
   பாத்திரத்தில் நடித்தவர் யார் என்று கூறாமல்
   விட்டால் எப்படி ..! //

   இத்தனையையும் கண்டுபிடித்து
   எழுதியவருக்கு, அந்த நபரின் பெயரை
   கண்டுபிடிக்கும் வழி தெரியவில்லை…
   என்ன செய்வது என்று கொஞ்சம்
   யோசித்தார் … பிறகு, சரி செல்வராஜன்
   என்று ஒருத்தர் இருக்கிறாரே…
   அவர் பார்த்துக் கொள்வார் என்கிற
   நம்பிக்கையில் பதிவை வெளியிட்டு
   விட்டார்…….. 🙂 🙂

   நன்றி செல்வராஜன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! இடுகையின் தலைப்பை வைத்து …” எப்படி இதை மறந்திர்கள் …? ” என்று தான் கேட்க தாேன்றியது … இருந்தாலும் ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s