அழுகை cum காமெடி ஆனால் real வில்லன்கள் …


சிதைத்து, வதைத்து, சின்னாபின்னமாக்கி –
ஜனநாயகம் என்கிற பெயரில் – ஆளாளுக்கு,
தங்கள் இஷ்டம்போல் விளையாடும் ஒரு
மைதானமாகி விட்டது கர்நாடகா மாநிலம்…

இந்த சுயநலவாதிகளை சரி செய்ய எந்த கோர்ட்டாலும்
முடியாது என்பதே நிஜம்…

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இப்போதைய கர்நாடக சட்டமன்ற
உறுப்பினர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது
என்று எந்த நீதிமன்றமாவது தடை விதிக்க முடியுமானால் –

இந்த தறுதலைகள் எல்லாம் தரைக்கு வந்து விடும்…

ஆனால், நமது ஜனநாயகத்தில் அதற்கு வழி இல்லையே…

—————————————

இந்த “நாடகா”வின் முக்கிய கதாபாத்திரங்கள்….

இது ஒரு அழுகைமூஞ்சி ஹீரோ வேடம் போடும் –
முக்கால் வில்லன் ….

கலர்ஃபுல் அழுகை …

இவர் ஒரு நவரச நாயகன் – கம் – காமெடி வில்லன்…?
KJP President BS Yeddyurappa, KJP leader Shobha Karandlaje during the KJP’s indefinite strike at Anandrao Circle in Bangalore on Tuesday demanding ‘Shaadi Bhagya’ for all community. –KPN


Photo Caption

நாளைய நாடகத்தின் – அடுத்த “சீன்” இவர் கையில் …..

மொத்தத்தில் – இங்கு யாருக்கும் வெட்கமில்லை…!!!

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அழுகை cum காமெடி ஆனால் real வில்லன்கள் …

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா…! இந்த // இது ஒரு அழுகைமூஞ்சி ஹீரோ வேடம் போடும் –
  முக்கால் வில்லன் …. // திடீர் அந்தர் பல்டி அடித்து பாஜக உடன் உறவு என்றால் ஷா எனற யாேக்கியர் வேண்டாம் என்று கூறுவாரா ….? நன்றாக கூறியுள்ளிர்கள்” அழுகை மூஞ்சி ஹீராே” வேடதாரி என்று …!

 2. புதியவன் சொல்கிறார்:

  இடுகையைப் படித்து ஒன்றே ஒன்று புரிந்தது.

  பெரிய பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ‘அழ’ வேண்டியதுதான் என்று.

  35 சீட்டுகள் பெற்றவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸின் நோக்கம் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே. காங்கிரஸில் இருப்பவர்களுக்கு, நாம் ஏன் பதவிகள் பெற முடியவில்லை என்ற வருத்தம். ம.ஜவில், என்னடா பதவியெல்லாம் குடும்பத்துக்குத்தானா என்ற ஆதங்கம். பாஜகவுக்கு அண்ணனை எப்போ கவிழ்த்து ஆட்சிக்கு வரலாம் என்ற ஆசை.

  “ஆசை வெட்கம் அறிவதில்லை”

 3. புவியரசு சொல்கிறார்:

  .
  அநேகமாக கர்நாடகாவில் சட்டமன்றம் கலைக்கப்பட்டு,
  இடைத்தேர்தல்களுக்கு வழி வகுக்கப்படும்.
  இங்கே மீண்டும் இந்த தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் –
  கர்நாடகா மக்களுக்கு அதைவிடப்பெரிய மானக்கேடு
  எதுவும் இருக்க முடியாது.
  ஒட்டுமொத்தமாக இந்த கூட்டத்தை, 3 கட்சிகளையும் சேர்ந்த
  எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் அத்தனை பேரையும்
  மக்கள் நிராகரிக்க வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புவியரசு,

   இப்படி அநியாயத்துக்கு கனவு காண்பது நியாயமா…?
   நமது தகுதிக்கு ஏற்றாப்போல் ஆசைப்படுங்கள்…

   வெகுவிரைவில், நமது மதிப்பிற்குரிய
   எட்டி என்கிற யெட்டியூரப்பா அடுத்த கர்நாடக
   முதலமைச்சராகப் பதவி ஏற்கப் போகிறார்
   என்கிற நற்செய்தியை கேட்கத் தயாராகுங்கள்…

   அமீத்ஜீ இருக்க வேறு மாதிரியெல்லாம்
   நடக்க விடப்படுமா என்ன….?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. tamilmani சொல்கிறார்:

  கர்நாடக அரசியல் ஊழல் பெருச்சாளிகளால் புரையோடிபோய்
  விட்டது. d k சிவகுமார் , ரேவண்ணா ,தேவகௌடா ,குமாரசாமி ,
  சித்தராமையா ,எடியூரப்பா ,ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் ,
  ஸ்ரீராமுலு ,ரேணுகாச்சார்யா இந்த மலை முழுங்கி மகாதேவன்கள்
  இருக்கும் வரை நல்ல ஆட்சி என்பது நிச்சயம் இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s