U.P. சந்நியாசி யோகியின் அகராதியில் ‘ராமராஜ்ஜியம்’ இப்படித்தான் இருக்குமா… ?


U.P. சந்நியாசி யோகியின் அகராதியில்
ராமராஜ்ஜியம் இப்படித்தான் இருக்குமா… ?

“200 Men On 32 Tractors”:
Village Head Kills – 10 In UP

Initial investigation has revealed that the tribals
have occupied the land for decades (file)

( https://www.ndtv.com/cities/sonbhadra-uttar-pradesh-eyewitness-on-how-
village-head-killed-10-in-up-2071691 )

—————

SONBHADRA: A day after a village chief and his associates
fired on a group of tribal farmers in Uttar Pradesh’s Sonbhadra
district killing 10 people over a land dispute, disturbing
details of the massacre have emerged.

The main accused, Yagya Dutt, had brought nearly 200 men
on 32 tractor trolleys to take possession of the land,
eyewitnesses have told NDTV.

After the tribals opposed,
his men fired at them for over half-an-hour, they add.
“They just started firing.
Once people started falling to the ground,
they started hitting them with lathis.
It was plain horror,” a woman told NDTV.

Another eyewitness has claimed that the shootout continued
for nearly half-an-hour.

“We did not know they had come armed with guns. When they
started firing, we ran here and there (to save ourselves),
started calling the police. The police came after an hour.
The firing went on for a half-an-hour,” the eyewitness told NDTV.

The dispute between the villagers and the village chief
pertains to a piece of land measuring 36 acre.

The tribals,
who have tilled
the land for generations,
have been demanding titles for it.

The main accused claimed he had bought the land 10 years ago
from a prominent local family.

Initial investigation has revealed that
the tribals have occupied the land for decades
but they don’t have ownership titles, sources said.

In 1955, a huge chunk of land including the area covered
by the village was transferred to a cooperative society
formed by a family, under a government scheme, the probe
reveals. In 1966, the scheme was abolished but the land
was not returned to the government. In 1989, the land
was transferred to individuals in the same family, including
the relatives of an IAS officer.

This family sold a chunk of this land to the
village chief in 2010.

“The tribals here have been appealing to government officers
for decades. They raised objection to the sale.
This land hould rightfully belong to the local gram sabha
(village assembly). But no one listened to them,”
Chhote Lal, former BJP parliamentarian, said.

24 people have been arrested so far in connection with
the shootout.

The main accused, however, is missing.

.
—————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to U.P. சந்நியாசி யோகியின் அகராதியில் ‘ராமராஜ்ஜியம்’ இப்படித்தான் இருக்குமா… ?

  1. புவியரசு சொல்கிறார்:

    இந்த போலி வேடதாரியை
    “சந்நியாசி” என்று சொல்வது
    உண்மையான சந்நியாசிகளுக்கு
    செய்யப்படும் அவமானம்.

  2. Selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! உத்திர பிரதேசம் எங்கே இருக்கிறது — நம் இந்தியாவிலா உள்ளது … ஆச்சர்யமாக இருக்கிறது .. அங்கே நடப்பவைகள் எல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் நடப்பதைப்போல தோன்றவில்லையே — அது ஒரு தனி சாம்ராஜ்யம் போல அல்லவா அரசாட்சி நடக்கிறது — எதையும் கண்டுகொள்ளாமல் நடுவன் அரசு இருப்பதும் ஏன் …?

    உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் தன்னிச்சையான அதிகாரப் போக்கையே சந்நியாசி நிலைப்படுத்துகிறாரா …? திரு யோகி அவர்கள் அங்கு ஆட்சி அமைத்தபின் நடந்த இது போன்ற செயல்களை பற்றி ஒரு பெரிய அட்டவணையே இருக்கிறதோ ..?

    இந்த பிரியங்கா காந்தி உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான நபர்களின் குடும்பத்தினரை பார்க்க சென்றவரை உ.பி போலிசார் கைது செய்தனர். போலிசாரின் நடவடிக்கையை எதிர்த்து ரோட்டில் அமர்ந்து பிரியங்கா காந்தி தர்ணா செய்தார். … அவரின் போராட்டம் காரணமாக காவல்துரையினர் கைது செய்ததாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன … !

    பாஜக வினரின் ” செயல்விளக்க மாநிலமா ” ..உத்திரபிரதேசம் … ?

  3. புவியரசு சொல்கிறார்:

    // பாஜக வினரின் ” செயல்விளக்க மாநிலமா ” ..உத்திரபிரதேசம் … ? //

    இப்படியும் சொல்லலாமோ ?
    மேக்கப் போடாத, ஒரிஜினல் பாஜக ஆட்சியின்
    ” சாம்பிள் ” அல்லது
    “டீஸர்” தான் யோகியின் உ.பி.ஆட்சி

    .

  4. புதியவன் சொல்கிறார்:

    உத்திரப் ப்ரதேசத்தில் இந்த மாதிரி அந்த அந்த ஏரியா கிராமத் தலைவர், நாட்டாண்மை போன்றவர்கள் துப்பாக்கியுடன் கூடிய அடியாட்கள் நிரம்பப்பெற்றவர்கள். இந்த கலாச்சாரம் (துப்பாக்கி) தமிழகத்தில் கிடையாது, ஆனால் முன்பு அடியாட்கள் உண்டு.

    நடந்தது பெரிய தவறு. இதில் யார் சம்பந்தப்பட்டவர்கள் என்பது செய்திகள் முழுமையாக வரும்போதுதான் தெரியும். யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் என்பதால் அவர் மீது பழியைப் போடுவது இப்போது தவறு. 24 பேர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காணாமல் போனவர் பிடிபட்டு சட்டப்படி உடனடி தீர்வை நோக்கி இது செல்லவேண்டும்.

    செம்மரக் கடத்தல் செய்த கொள்ளையர்களை (21 பேர்) சந்திரபாபு நாயுடு அரசு சுட்டது. அது சரியான செயல்தான். தவறு என்று நினைப்பவர்கள் தெலுகு தேச அரசை குறை சொல்லலாம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – அதற்கும் அரசு இயந்திரம் காரணம் என்று குற்றம் சொல்லலாம். கருணாநிதி தலைமையில் சென்னையில் ஊராட்சிமன்றத் தேர்தலின்போது நடந்த குண்டர்கள் அராஜகம், ரத்த ஆறு போன்றவற்றையும் அரசின் செயலாகச் சொல்லலாம். ஆனால் உபியில் நடந்தது அரசின் செயல் அல்ல.

    தனி ஒரு ரெளடி கும்பல் செய்தது. இதற்கு எந்த மாதிரியான எதிர்வினை, உ.பி அரசு எடுக்கிறது என்பதைக் கவனித்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும். இந்த இடுகையிலேயே பாஜக வைச் சேர்ந்தவர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.

    உ.பி யில் இழந்த கெளரவத்தை மீட்க பிரியங்கா முனைகிறார். அவ்ளோதான்.

    • Prabhu Ram சொல்கிறார்:

      // செம்மரக் கடத்தல் செய்த கொள்ளையர்களை (21 பேர்) சந்திரபாபு நாயுடு அரசு சுட்டது. அது சரியான செயல்தான். தவறு என்று நினைப்பவர்கள் தெலுகு தேச அரசை குறை சொல்லலாம். //

      100 வருடங்களுக்கு முன் என் தாத்தா
      நோய்வாய்ப்பட்டு செத்துப்போனார்.
      அது சரியான செயல்தான்.

      அது தவறு என்று நினைப்பவர்கள்
      எமதர்மனை எப்போது வேண்டுமானாலும்
      குறை சொல்லலாம்.

      ஆனால் எனக்கு யோகியை மட்டும் ஒன்றும் சொல்லக்கூடாது.
      அவ்வளவு தான்.

      • புதியவன் சொல்கிறார்:

        பிரபு ராம்… எனக்கு எதைப்பற்றியும் பயாஸ்டு ஒபினியன் கிடையாது. நீங்கள் சொன்ன லாஜிக்படி, கர்நாடகாவில் வியாசராஜா சமாதியை உடைத்ததில் முதல்வர் குமாரசாமி மற்றும் சீத்தாராமையா இருவரின் சதிதான் காரணம் என்றும் சொல்வீர்கள் போலிருக்கிறது. எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நிகழ்ந்த 3 தற்கொலைகளுக்கும் நேரடியாக எம்.பி. பச்சமுத்து அவர்கள், மற்றும் அந்தக் கூட்டணித் தலைவர் ஸ்டாலின்’தான் காரணம் என்றெல்லாம் சொல்வீங்க போலிருக்கு.

        எனக்கு அந்த மாதிரி ஒபினியன் இல்லை.

  5. Sridhar சொல்கிறார்:

    Sir,

    I do condemn strongly the incident and no justification.

    However this ARTICLE of NDTV will definitely have been written with “GLASS” and “I” doubt if it can be taken in its face value.

  6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் என்பதால்
    அவர் மீது பழியைப் போடுவது தவறு. //

    ரொம்ப கரெக்ட்….
    அவர் பியூனின் மீது தான் பழியைப்போட வேண்டும்…

    மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை கவனிப்பது
    முதலமைச்சரின் பியூன் தானே …

    இப்போது திருப்தி தானே…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  7. ஸ்ரீதர் சொல்கிறார்:

    ஒரு புண்ணியத்தலம் உடைக்கப்படுகிறது.. 500 ஆண்டுகளுக்கும் பழமையானது…வ்யாஸராஜரின் பேரருள் பெற்றது.. நவபிருந்தாவனத்தை தரிசித்தவர்களுக்கு தெரியும்.. ரோடு வழியாகவும் படகின் வழியாகவும் சென்று தரிசிக்க வேண்டிய 9 ப்ருந்தாவனங்கள்… வெயில் காலத்தில் ஒரு சுற்று வருவதற்க்குள் கால் கொப்புளித்து விடும் …அதையும் மீறி வரும் பக்தர்கள் உணர்வது ஒரு மன நிம்மதியை.. சரி!! ராயர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை…

    அப்பேற்பட்ட இடம் மாபாவிகளால் உடைத்து எறியப்பட்ட விஷயம் பரவியவுடன் வேதனை பட்டவர் அநேகம்.. என்னைப்போல் பலர் விக்கித்து நின்று விட்டோம் …

    ஆனால் ஒரு கல்லெறி கூட இல்லை ,எரிப்படவில்லை.. ஐயோ !!பெரும்பானமையினருக்கு சுதந்திரம் பறிபோய் விட்டது என்கிற அரற்றல் இல்லை
    ..கவரேஜ் செய்ய எந்த ஆபிரஹேமிய மீடியாவும் வரவில்லை… ஆங்கில தினசரிகளில் பிரபலங்கள் இங்கு இருக்கவே பயமாய் இருக்கிறது, மத சுதந்திரம் பறிபோய் விட்டது என்கிற பேட்டிகள் இல்லை …

    ஒரு வீடு அரசு அலுவலகம் எதுவும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.. எங்கும் ஒரு சிறு ரத்தம் கூட சிந்தவில்லை.. பஸ்கள் உடைக்கப்படவில்லை..

    இதே மற்ற மத வழிபாடு தளங்களில் ஒரு கண்ணாடி பெயர்ந்து இருந்தால் கூட ஆகும் விளைவுகளை நான் விளக்க வேண்டியதில்லை..

    இங்கே ஒரு சிறு பதற்றம் கூட இல்லை.. மனதில் வேதனை இருந்தாலும் அனைவரும் செயலில் இறங்கினார்கள்..
    ஒருவர் ஒருவராக குழுமினர் …கல் கல்லாக அடுக்கி இதோ 32 மணிநேரத்தில் பிருந்தாவனத்தை கட்டி எழுப்பி விட்டார்கள்..

    இதுதான் இந்துக்களின் உறுதியான மென் சக்தி …காலம்காலமாக இந்துமத தலங்கள் நிர்மூலமாக்கப்பட்டாலும் புனருத்தாரணம் செய்ய முடியும் என்கிற ஆன்ம பலம்..17 முறை சோமநாதர் ஆலயம் எழுந்து நின்றதும்,வருடக்கணக்கில் வழிபாடு நின்றுபோன மதுரை மீனாட்சியும் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் மீண்டும் குடமுழுக்கு கண்டு அருட்பாலிக்கும் அற்புத ஆற்றல்…

    எங்கள் கோவில்களை ,தெய்வங்களை நீங்கள் நிர்மூலமாக்கினாலும் எங்களுக்கு காலம் வரும்போது மீண்டும் எங்கள் கோவில்களை, தெய்வங்களை பிரதிஷ்டை செய்வோம் முழு பலத்துடன் முன்னை விட அழியா பேராற்றலுடன் …

    மற்ற மதங்கள் இந்து மதத்திடம் தோற்பது இங்கேதான்…இந்த மென் சக்திதான், மெல்லிய ஆனால் உறுதியான ஆன்மபலம்தான் இந்து மதத்தின் பலமும் பலவீனமும்..

    https://www.vikatan.com/spiritual/temples/holy-worship-place-vandalized

    ஐயா இதற்க்கும் கண்டனம் தெரிவிப்போம்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஸ்ரீதர்,

      இந்த சம்பவத்தை, மத உணர்வுகளோடு நீங்கள்
      சம்பந்தப்படுத்துவது தவறு. இதற்கும் மதப்பிரச்சினைகளுக்கும்
      எந்தவித சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

      இந்த சம்பவத்திற்கான காரணமென்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிப்பது –

      // This looks like the handiwork of treasure hunters.
      Treasure hunting has become a menace in the region as many
      believe Krishna devaraya’s wealth is hidden somewhere in the region.. //

      இந்த சம்பவத்தை அதீதமான மத உணர்வுகள் கொண்டு
      பார்ப்பது தவறு. உங்கள் எதிர்வினை –
      அவசியத்தை தாண்டி செல்கிறது.
      இதை மதத்தோடு சம்பந்தப்படுத்தாதீர்கள்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • ஸ்ரீதர் சொல்கிறார்:

        ஐயா, மன்னிக்க வேண்டும்.

        தங்கள் இடுகையின் தலைப்பில் உள்ள “ராமராஜ்ஜியம்” வார்த்தையும், நிகழ்ந்த சம்பவவும், இதே போல் மத உணர்வுகளை படிப்பவர் மனதில் தூண்டாமல் இருக்கும் என்று என்னால் என்ன முடியவில்லை.

        தாங்கள் என்னை விட அனுபவம் மிக்கவர், இருந்தாலும் என் எண்ணத்தை பதிவு செய்கிறேன். நன்றி

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          .

          ஸ்ரீதர்,

          நீங்கள் “ராமராஜ்ஜியம்” என்பதன் பொருளையே
          தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று
          நினைக்கிறேன். கதாகாலட்சேபங்கள், ஆன்மிக உரைகள்
          நிச்சயம் நிறைய கேட்டிருப்பீர்கள்.

          ராமராஜ்ஜியம் என்பதன் பொருள் –

          தர்மத்தின் ஆட்சி,
          சட்டத்தின் ஆட்சி,
          நீதி பிறழாத ஆட்சி,
          குடிமக்களின் நலன் கருதும் ஆட்சி,
          குடிமக்கள் அனைவரின் குறைகளையும்
          தீர்த்து, அவர்களை மகிழ்ச்சியோடு
          வைத்திருக்கும் ஆட்சி –

          -என்று தான் பொருள்.

          மதத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.
          இது முழுக்க முழுக்க அரசாட்சி சம்பந்தப்பட்டது.

          நான் இந்த இடுகையை எழுதியிருப்பதும்
          அதே அர்த்தத்தில் தான்.

          – உங்கள் அணுகுமுறையைப்பற்றி நான் சொன்னது
          சரியே என்பதை இப்போது புரிந்துகொள்வீர்களென்று
          நம்புகிறேன்.

          எந்த ஒரு மதத்திற்கும் எதிராக, எப்போதுமே –
          நான் நிச்சயமாக எதுவும் எழுத மாட்டேன் என்பதை
          இந்த வலைத்தளத்தை
          தொடர்ந்து படித்து வரும் உங்களால் புரிந்து
          கொள்ள முடியவில்லை என்பது எனக்கு
          வருத்தமாக இருக்கிறது.

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

          • ஸ்ரீதர் சொல்கிறார்:

            “நான் இந்த இடுகையை எழுதியிருப்பதும்
            அதே அர்த்தத்தில் தான்.”

            ஐயா தெளிவு படுத்தியமைக்கு நன்றி. மற்ற மறுமொழியாளர்களும், வாசிப்பவர்களும் இதே அர்த்தத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

            மற்றும் ஒரு விஷயம். எல்லா திருடர்கள் செய்திகளையும் மதத்தோடு பார்க்காமல் இருந்தால் நாட்டுக்கு நல்லது.

            செய்திகளை, செய்திகள் தருபவர்கள் எண்ணங்களை தாண்டி எல்லோரும் பார்த்தால் நன்று.

            நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s