“புலி”யை “எலி” ஆக்கும் ஒரு முயற்சி….


இதை மிகைப்படுத்தல் என்று நினைக்கும் பாஜக நண்பர்கள்
வேண்டுமானால் இடுகையின் தலைப்பை
“குதிரை”யை “கழுதை” ஆக்கும் முயற்சி என்று
மாற்றிக் கொள்ளலாம்….!!!

சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பல்வேறுபட்ட
அமைப்புகள், எதிர்க்கட்சிகள் (அப்போது அதில் பாஜகவும்
அடக்கம்…) ஆகியவற்றின் நீண்ட போராட்டங்களுக்கும்
வற்புறுத்தல்களுக்கும் இணங்கி,

– 2005-ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்
(Right To Information Act ) காங்கிரஸ் கூட்டணி அரசால்
கொண்டு வரப்பட்டது. பின்னாட்களில் அதுவே
அந்த ஆட்சிக்கு எமனாக மாறி –
பல மெகா ஊழல்களை ( 2ஜி, நிலக்கரி, காமன்வெல்த்
கேம்ஸ் etc…) வெளிப்படுத்த காரணமாகவும் அமைந்து
ஜனநாயகத்தின் வலிமையை உறுதிப்படுத்தியது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 6-வது ஆண்டைக் கடந்து
கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பெரும்பாலான
மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்
நிலையில் – இந்த சட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது
தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று ஆளும் கட்சி
அஞ்சுவதாகத் தெரிகிறது.

தங்கள் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது
என்று சொல்லிக்கொள்ளும் பாஜக கட்சி,
வெளிவராமல் மறைந்திருக்கும் ஊழல்கள் எதிர்காலத்தில்
வெளிப்பட்டு விட்டால், தாங்களும் எதிர்காலத்தில்
காங்கிரஸ் கூட்டணி அரசின் கதியை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும் என்று அஞ்சுவதாகவே தோன்றுகிறது.

ஊழல் வெளியே தெரிந்தால் தானே பிரச்சினை…?
குதிரையை கழுதையாக்கி விட்டால் –
வேகமும், விளைவும் மாறுபடும் அல்லவா…?

அதன் விளைவு குதிரையை கழுதையாக மாற்றும் முயற்சியாக,
தேர்தல் கமிஷன் போல், சுய அதிகாரம் பெற்ற தனிப்பட்ட அமைப்பான
Central and State Information Commissioners -ன் அலுவலகங்களை

– மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் ஒரு இலாகா போல்
மாற்றும் வகையில் ஒரு சட்ட திருத்த மசோதாவை பாஜக அரசு
கொண்டு வந்திருக்கிறது…. லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டு
தற்போது ராஜ்ய சபாவில் விவாதத்திற்கு வரவிருக்கிறது.

தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், வயது, சம்பளம்
ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை இந்த சட்ட
திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தன்வசம் எடுத்துக் கொள்கிறது….

இந்த மாற்றங்கள் / திருத்தங்களுக்கான தேவை என்ன என்பதற்கு
பாஜக அரசால் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த காரணத்தையும்
முன்வைக்க முடியவில்லை…

மேலும், ஒரிஜினல் சட்டம் – பொதுமக்கள்,
சமூக நல அமைப்புகள், எதிர்க்கட்சிகள் ஆகிய அனைத்து தரப்பிடமும்
கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துகளை பெற்ற பின்
உருவாக்கப்பட்டது.

இப்போதைய திருத்தங்கள் – அவ்வாறு மக்கள் முன் விவாதத்திற்கு
வைக்கப்படவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், பாராளுமன்றத்திலும்
தீவிரமான விவாதங்களுக்கு/பரிசீலனைகளுக்கு உட்படுத்தப்படாமலே
அவசர அவசரமாக நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடிய விரைவில் – இந்த சட்டத்தை பயன்படுத்தும் மக்கள்
குதிரைக்கு பதிலாக கழுதை மீது சவாரி செய்ய நேரிடலாம்.

வாழ்க ஜனநாயகம்…

.
————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “புலி”யை “எலி” ஆக்கும் ஒரு முயற்சி….

 1. Prabhu Ram சொல்கிறார்:

  புலி, எலியை விட
  குதிரை – கழுதை பெட்டர் என்று தோன்றுகிறது;
  ஆனால், நான் பாஜக இல்லை 🙂

 2. புதியவன் சொல்கிறார்:

  என்னைக் கேட்டால், தகவல் அறியும் உரிமை, எல்லா இடத்திலும் (ராணுவம் அல்லது மிக மிக சென்சிடிவ் ஆன விஷயங்களைத் தவிர) செல்லுபடியாகும்படி இன்னும் விசாலப்படுத்த வேண்டும்.

  இதன் வீச்சை மட்டுப்படுத்தவும், ஒண்ணுமில்லாமல் செய்யவும் பாஜக முனைவது, சமூக ஆர்வலர்கள் அனைவரும் கண்டிக்கத்தக்க விஷயமாகும். மக்களுக்குத் தெரியக்கூடாத விஷயம் என்று ஒன்று இருக்கா (சென்சிடிவ் தவிர). இந்த தகவல் ஆணையர்கள், உச்ச நீதிமன்றம் அல்லது நீதித்துறையின் ஒரு பகுதியாக இருக்கணும், இல்லைனா, தேர்தல் கமிஷன் போன்று தனிப்பட்டதாக இருக்கணும்.

  பாஜக செய்ய முனைந்துள்ளது கண்டிக்கத்தக்கது.

 3. Raghavendra சொல்கிறார்:

  Perfectly said.
  It is an effort to reduce the Information Commissions
  to the level of just as another Department of the Govt.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s