இந்திய அரசியலோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா…? எந்த விதத்தில்…?


வெறுப்பு அரசியலை மட்டுமே அறிந்த ஒருவர் –
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறார்.
அடுத்த அதிபர் தேர்தலுக்கும் தயாராகிவிட்டார்.
2020-ல் நடக்கவிருக்கிற அமெரிக்க அதிபர்
தேர்தலுக்கான பிரச்சாரத்தை இனிதே தொடங்கி
விட்டார். இந்த முறை அமெரிக்கர்கள் அவரைத்
தேர்ந்தெடுப்பார்களா, நிராகரிப்பார்களா?

—– என்கிற கேள்வியுடன் இந்து தமிழ் திசை நாளிதழில்
“ட்ரம்ப்பும் தேர்தலும்” என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள
ஒரு கட்டுரை சில விஷயங்களை முன்னெடுத்துச்
செல்கிறது.

ஒரு சுவாரஸ்யமான கேள்வி –

இதில் கூறப்பட்டிருக்கும் எந்த விஷயத்தையாவது –
இந்திய அரசியலோடு பொருத்திப் பார்க்க முடியுமா…?
(முழு கட்டுரையையும் படித்தால் தான் இந்த கேள்விக்கு
விடை கிடைக்கும்…!!! )

————————————————————-
https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/509141-trump-perspective.html
—————————–

ட்ரம்ப் போன்ற ஒருவரை அமெரிக்கா
ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும், அதில்
அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே உள்ள
உறவு என்ன மாதிரியாக பங்காற்றியிருக்கிறது
என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு தனிநபரின் பொருளாதாரத்தோடும்
அரசியலுக்குத் தொடர்பிருக்கிறது.

ஒரு நாட்டின் செல்வப் பகிர்வு ‘கினி இண்டெக்ஸ்’
மூலம் அளவிடப்படுகிறது. இது 0-1 என்ற அளவில்
வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் ‘கினி இண்டெக்ஸ்’ – பூஜ்யமாக – இருந்தால்
அங்கே பொருளாதார – ஏற்றத்தாழ்வு – மிகக் குறைவாக
இருக்கிறது என்று அர்த்தம்.

அதுவே ‘கினி இண்டெக்ஸ்’ 1-ஆக இருந்தால் –
அங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வு – அதிகமாக –
இருக்கிறது எனலாம்.

இந்த கினி இண்டெக்ஸின் அளவு நாட்டின் அரசியலில்
பிரதிபலிக்கும்.

ஏற்றத்தாழ்வுகள் குறையும்போது –

பரம்பரை செல்வந்தர்கள், புது செல்வந்தர்களுக்கு
எதிராகத் திரும்புவார்கள். வலதுசாரி மனப்பான்மை
அதிகமாக இருக்கும்.

ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்போது –

இடதுசாரி இயக்கங்களின் எழுச்சி அதிகமாக இருக்கும்.
அதாவது வறுமையில் வாழும் மக்கள் அதிகமானால்
அங்கே புரட்சி, பொதுவுடைமை சித்தாந்தங்கள்
வெடிக்கின்றன.

அதே மக்களின் வருமானம் அதிகரித்து வாழ்க்கை
முறை மேம்பட்டுவிட்டால் முதலாளித்துவ வலதுசாரி
எண்ணம் மேலோங்குகிறது. பெரும்பான்மை மக்களுக்குச்
சேர வேண்டியதை சிறுபான்மையினர் எடுத்துக்
கொண்டதைப் போன்ற ஒரு பார்வை உருவாகிறது.
இப்படி எப்போதெல்லாம் சமநிலை குலைகிறதோ
அப்போதெல்லாம் அரசியல் மாற்றங்கள் உண்டாகின்றன.

கினி இண்டெக்ஸ்
—————————–

இன்றைய சூழலில் அமெரிக்கா மட்டுமல்ல, உலகின்
பல நாடுகளில் உலக மயமாக்கல், தாராளமயமாக்கல்
போன்றவற்றால் இந்த கினி இண்டெக்ஸ்
குறைந்துகொண்டே இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள்
குறைந்ததால் மகிழ்ச்சியாகத்தானே இருக்க வேண்டும்..?

ஆனால் அப்படி இருப்பதில்லை. இங்கு பிரச்சினை
என்னவெனில், உள்ளூர்க்காரர்களைக் காட்டிலும்,
வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் செல்வ செழிப்புடன்
வளர்ந்திருக்கிறார்கள் என்பதுதான்.

அவர்களுடைய உழைப்பு, திறமை அதெல்லாம் யாருக்கும்
தேவையில்லை. எங்கிருந்தோ வந்தவர்கள் எனக்கு
சேர வேண்டிய செல்வத்தைச் சுரண்டி எடுத்துக்
கொண்டார்கள் என்ற பார்வையைத் தூண்டி அரசியல்
செய்ய ஆரம்பித்திருக்கின்றனர் அரசியல்வாதிகள்.
ட்ரம்ப் அதைத்தான் செய்தார்.

அமெரிக்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்
குடியேறிகளும், இஸ்லாமியர்களும்தான் என்று பேசினார்.

அதற்குக் காரணம், ஒபாமாவின் பலவீனமான
பொருளாதாரப் பார்வை என்று அவர் குற்றம் சாட்டினார்.

அமெரிக்கர்களைத் தூண்டினார். அவர் திரும்பத் திரும்ப
சொன்னதையே சொன்னார். ‘இதற்கு காரணம் அவர்கள்தான்’
எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். அமெரிக்கர்களுக்கு
கண் முன்னே அது உண்மையாகத் தெரிந்தது. ட்ரம்ப்
தங்களைக் காக்க வந்த தேவதூதர் என அமெரிக்கர்கள்
நம்பினர். அதிபராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

பொதுநலப் பார்வையால் பெரும்பான்மை சமூகம்
பாதிக்கப்பட்டால் அது விரைவில் சிறுபான்மையினரை நோக்கி
சாட்டையைக் கையில் எடுக்கும் என்பது நிரூபணமானது.

ட்ரம்ப்பின் வெற்றி சர்வதேச அளவில் பலம் பெற்று வரும்
வலதுசாரிச் சித்தாந்தத்தின் வெற்றியாகவும்,
உலகமயமாக்கலின் தோல்வியாகவும் அமைந்தது.

அமெரிக்கா மட்டுமல்ல, இன்றைய தேதியில்,
பல நாடுகளில் தேசியவாத முழக்கங்கள் தீவிரமாக
ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இங்கிலாந்து எடுத்த
பிரெக்ஸிட் முடிவும் இப்படியானதுதான்.

ட்ரம்ப் மீது நம்பிக்கை
——————————–

ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில், தான் சொன்னபடி
அமெரிக்காவை மேன்மை மிகு நாடாக மாற்றிவிட்டாரா,
அமெரிக்கர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பைக்
கொடுத்துவிட்டாரா, மெக்சிகோ எல்லையில் சுவர்
எழுப்பிவிட்டாரா, இஸ்லாமியர்களை துரத்திவிட்டாரா
என்றால், இவை எதுவுமே நடக்கவில்லை.

ஆனாலும், அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் மீது இன்னமும்
அந்த நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையைத்
தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதுதான் அரசியல்.
அந்த அரசியலை மிக நன்றாகவே செய்து
கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

ஆனால், சமீப காலங்களில் அவருடைய நடவடிக்கைகளில்
சமரசங்களும், சகோதரத்துவ வாடையும் அடிப்பதாகப்
பலர் குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம், சீனா மீது
எடுத்த வர்த்தகப் போர் நடவடிக்கைகளில் மீண்டும் மீண்டும்
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறார்.

அதைவிட முக்கியமாக ஒரு காலத்தில் கையில் இருக்கும்
பொத்தானை அழுத்தி மொத்த நாட்டையும் காலி
செய்துவிடுவேன் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த
அதே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன்
அணு ஆயுதங்கள் குறித்த விவகாரத்தில் சகோதரத்துவம்
பாராட்டுகிறார்.

இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் கால் வைக்காத
சர்ச்சை மிகுந்த கொரிய தீபகற்ப எல்லையில் அவருடன்
சந்திப்பு நடத்துகிறார்.

அமெரிக்காவில் யாருக்கும் அனுமதியில்லை என்று
விசா நடவடிக்கைகளில் கெடுபிடி காட்டியவர் பின்னாளில்
அதிலிருந்து பின்வாங்கினார். அமெரிக்க குடியுரிமை
பெறுவதில் பிற நாடுகளுக்கு இருந்த வரம்புகளை
உயர்த்தினார்.

உண்மையான முகம்
———————

நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறுப்பை மட்டுமே
வெளிப்படுத்திய ட்ரம்ப்புக்கும் – இந்த நடவடிக்கைகளை
எடுத்த ட்ரம்ப்புக்கும் சம்பந்தமே இல்லையே
எனும் அளவுக்கு மாற்றங்களைக் காட்டுகிறார்.

இவையெல்லாம் பார்த்து ட்ரம்ப் திருந்திவிட்டாரா என்று
நினைத்தால் அதைவிட நகைச்சுவை ஒன்று இருக்க முடியாது.

என்னதான் ட்ரம்ப் அண்டை நாடுகளுடனான உறவில்
தன் நிலைப்பாடுகளில் மாற்றங்களை வெளிப்படுத்தினாலும
அவருடைய உண்மையான முகம் என்பது எப்போதும்
ஒன்றுதான் என்கிறார்கள் அமெரிக்க அரசியலை
உற்றுகவனிப்பவர்கள்.

ஒரு நாட்டின் தலைவனுக்கான அரசியலைப்
பொருத்தவரை சொந்த நாட்டு மக்களின் ஆதரவைப்
பெற்றால் மட்டும் போதாது.

உலக நாடுகளின் அரங்கிலும் நல்ல பெயர் வாங்க
வேண்டியிருக்கிறது. அது உள்நாட்டில் ஆதரவை மேலும்
அதிகப்படுத்த வசதியாக இருக்கும்.

உலக நாடுகளின் தலைவர்களுடனான் சந்திப்புகள்,
கைகுலுக்கல்கள் அனைத்துமே உள்நாட்டிலுள்ள மக்கள்

அனைவரிடத்திலும் முக்கியச் செய்தியாகச் சென்று சேரும்.
அதுவும் இதுவரை வரலாற்றில் நிகழாத சந்திப்புகளை
யெல்லாம் நிகழ்த்திவிட்டால் அதைவைத்து பெரிய அளவில்
அரசியல் செய்யலாம்.

இந்தக் கணக்கெல்லாம் இல்லாமல் எந்த நாட்டுத்
தலைவர்களும் சந்திப்புகளை நிகழ்த்துவதில்லை.
அரசியல் என்பதே பிரச்சினைகளை உருவாக்குவதும்,
அதனை சரி செய்வதும்தானே…!!!

ஆனால், நீண்டகால அரசியலுக்கு உதவியாக இருக்கும்
எந்தப் பிரச்சினைக்கும் அரசியல்வாதிகள் தீர்வு காண
விரும்ப மாட்டார்கள்.

அதற்கான காரணங்களை அடுக்கி அதன் மூலம் அரசியல்
செய்யவே விரும்புவார்கள். அதைத்தான் ட்ரம்ப்
செய்துவந்தார். இனியும் அப்படியே செய்வார்.

ஜகஜ்ஜால கில்லாடி
——————–

ஆனாலும், அடுத்த முறையும் ட்ரம்ப் அதிபராகத்
தேர்ந்தெடுக்கப்படவே வதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம்,
மக்களின் உள்ளுணர்வுகளே அரசியலைத் தீர்மானிக்கின்றன.

சமூக வலைதளங்கள் மிக எளிதில் அதைக் காட்டிக்
கொடுத்துவிடுகின்றன. அரசியல் விவகாரங்களை
மேற்கொள்ளும் ஏஜென்சிகள் சமூக வலைதளங்களைத்
தங்களின் முன்னணி ஆயுதமாகப் பயன்படுத்த காரணமே
அதுதான்.

ட்ரம்ப்பும் ட்விட்டரே கதி என்று கிடப்பதும் அதனால்தான்.

அமெரிக்கர்கள் முற்போக்காகக் காட்டிக்கொண்டாலும்
உள்ளுக்குள் வேறாக இருக்கிறார்கள் என்பதையே
ட்ரம்புக்கான ஆதரவு காட்டுகிறது.

சமூக வலைதளங்கள் மூலமாக மக்களின் உள்ளுணர்வு
என்ன என்பதை அரசியல் தந்திரிகளால் எளிதில்
கணித்துவிட முடிகிறது. தொழில்நுட்ப வசதியும், பணமும்
கையில் இருந்தால் அரசியலில் வெற்றி நிச்சயம். ட்ரம்ப்
இந்த இரண்டிலும் ஜகஜ்ஜால கில்லாடி.

அரசியலைப் பொருத்தவரை வெற்றி மட்டுமே பிரதானம்.
வெற்றி சாத்தியமெனில் யாரை வேண்டுமானாலும்
தலைவனாக்க அமைப்புகள் தயாராக இருக்கும்.

ட்ரம்ப் விஷயத்திலும் அதுதான் நடந்தது. 2020-லும்
இது நடக்கும்.

அவருக்கு அரசியல் அறிவு கிடையாது,
கொள்கை கிடையாது, முட்டாள்தனமான முதலாளி
என எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டாலும்,

அமெரிக்காவின் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி அதில்
வெற்றி காண யாரால் முடியும் என்பதே பிரதான நோக்கம்.

ட்ரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான
வாய்ப்புகளுடன் இருப்பதால் இந்த முறையும் குடியரசு
கட்சியிலிருந்து ட்ரம்ப் முன்மொழியப்படுவார்.

மேலும் ட்ரம்ப் முன்வைக்கும் அதே தேசியவாத
முழக்கங்களை ஆதரிப்பவர்கள்தான் குடியரசு கட்சியில்
இருக்கிறார்கள். குடியரசு கட்சி ட்ரம்ப்புக்கு முழு ஆதரவு
தரும்.

ஜனநாயகக் கட்சிதான் இப்போதைக்கு சுவாரஸ்யம்
கூட்டுகிறது. ஜனநாயகக் கட்சியில் 26 பேர்
அதிபர் வேட்பாளர் பரிந்துரைக்கு காத்திருக்கிறார்கள்.

ஆனாலும் ட்ரம்ப் அளவுக்கு கீழிறங்கி அரசியல் செய்ய
ஜனநாயகக் கட்சியில் யாருமில்லை. இதனால்
இவர்கள் யாரும் ட்ரம்புக்கு நிகராகப் போட்டியிட முடியாது.

மேலும், ட்ரம்ப் குறித்து விமர்சிக்க இருப்பது
மிகக் குறைவுதான்.

அவருடைய பெண் சகவாசங்கள், முட்டாள்தனமான
அறிக்கைகள், ட்விட்டர் பதிவுகள், வெறுப்பு அரசியல்,
தேர்தல் தகிடுதத்தங்கள் என பட்டியல் இருந்தாலும்
இவையெல்லாம் உலகறிந்த விஷயம். அவருடைய
பெயரை சீர்குலைக்க இதுவெல்லாம் போதாது.

ஆமாம் நான் மிக மோசமானவன்தான் என்று
அம்பலமாகிவிட்ட ஒரு தலைவரை நீங்கள் எத்தனை
மோசமாக விமர்சித்தாலும் அது எடுபடாது….

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இந்திய அரசியலோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா…? எந்த விதத்தில்…?

  1. புதியவன் சொல்கிறார்:

    //இதில் கூறப்பட்டிருக்கும் எந்த விஷயத்தையாவது – இந்திய அரசியலோடு பொருத்திப் பார்க்க முடியுமா…?//

    நான் கா.மை. சார் அரசியல் அறிவில் மிகவும் தெளிந்தவர், பழைய அரசியல் விஷயங்களை மறக்காதவர் என்றெல்லாம் ரொம்பப் பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த சிம்பிள் மேட்டரில் அப்படி இல்லைன்னு சொல்லிட்டீங்களே.

    /அவருடைய பெண் சகவாசங்கள், முட்டாள்தனமான அறிக்கைகள், ட்விட்டர் பதிவுகள், வெறுப்பு அரசியல், தேர்தல் தகிடுதத்தங்கள் / – கருணாநிதி, அண்ணா இவர்களுக்கு 100% பொருந்திப்போகிறதே

    //ட்ரம்ப் அளவுக்கு கீழிறங்கி அரசியல் செய்ய ஜனநாயகக் கட்சியில் யாருமில்லை// – கருணாநிதி, அண்ணா அளவுக்கு கீழிறங்கி அரசியல் செய்ய காங்கிரஸில் காமராசராலும் மற்ற எவராலும் முடியலையே

    //அதே தேசியவாத முழக்கங்களை ஆதரிப்பவர்கள்தான்// – இங்க ‘இனவாதம்/திராவிட’ என்ற தகிடுதத்த அரசியலை ஆதரித்தவங்கதான் திமுகவிலும் இருந்தாங்க.

    //வெறுப்பு அரசியலை மட்டுமே அறிந்த ஒருவர்// – இதைத்தானே அண்ணாவும் கருணாநிதியும் செய்தது….இன்றுவரை ஆரியர்கள், பார்ப்பனர்கள், சிறுபான்மையினர் என்ற தாளத்தில்தானே அவர்களது ஊழல் சாம்ராஜ்யம் ஓடிக்கிட்டிருக்கு. என்ன ஒண்ணு.. அமெரிக்காவில் இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தைத் தலைவர்கள், அமெரிக்கர்களின் தலையில் மிளகாய் அரைத்து நிறுவ முடியாது. அமெரிக்க மக்கள் தமிழர்களைவிட அறிவில் , நல்ல குடிமகனாக இருப்பதில், நாட்டுப்பற்றில் மிக மிகச் சிறந்தவர்கள்.

    ஆனால் தமிழர்களைப்போல, அமெரிக்கர்கள் கிடையாதுன்னு நினைக்கிறேன். எனக்கு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவார்னு தோன்றவில்லை, அவரது சில கொள்கைகள் சரி என்று நான் எண்ணியபோதும் (அமெரிக்கர்களுக்கு வேலை, H1B விசால வர்றவங்க மனைவிகளுக்கு வேலை கிடையாது என்றெல்லாம் பிற நாட்டினர் குடியேற்றக்கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, சம்பள விகிதம் பற்றிப் பேசுவது போன்று. எது பிடிக்காது என்றால் துக்ளக் போல நடக்காத விஷயங்களை முன்னெடுப்பது)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      // நான் கா.மை. சார் அரசியல் அறிவில் மிகவும் தெளிந்தவர், பழைய அரசியல் விஷயங்களை மறக்காதவர் என்றெல்லாம் ரொம்பப் பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த சிம்பிள் மேட்டரில் அப்படி இல்லைன்னு சொல்லிட்டீங்களே. //

      ஓ -நான் அப்படியா சொல்லி இருக்கிறேன்… 🙂 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      .
      புதியவன்,

      உங்கள் ஆசைக்கு திமுகவை பொருத்திப்
      பார்த்து விட்டீர்கள்… சரி.

      ஆனால், இதைத்தவிர, திமுகவுக்கு
      பொருத்தமில்லாத இன்னும் சில விஷயங்கள்
      சொல்லப்பட்டு இருக்கின்றனவே –

      —————–

      // ஒரு நாட்டின் தலைவனுக்கான அரசியலைப்
      பொருத்தவரை சொந்த நாட்டு மக்களின்
      ஆதரவைப் பெற்றால் மட்டும் போதாது.

      உலக நாடுகளின் அரங்கிலும் நல்ல பெயர்
      வாங்க வேண்டியிருக்கிறது. அது உள்நாட்டில்
      ஆதரவை மேலும் அதிகப்படுத்த வசதியாக இருக்கும்.

      உலக நாடுகளின் தலைவர்களுடனான் சந்திப்புகள்,
      கைகுலுக்கல்கள் அனைத்துமே உள்நாட்டிலுள்ள
      மக்கள் அனைவரிடத்திலும் முக்கியச்
      செய்தியாகச் சென்று சேரும்.

      அதுவும் இதுவரை வரலாற்றில் நிகழாத
      சந்திப்புகளையெல்லாம் நிகழ்த்திவிட்டால்
      அதைவைத்து பெரிய அளவில்
      அரசியல் செய்யலாம். ///

      ——————-

      இதுவெல்லாம், இந்திய அளவில்
      யாருக்கு பொருந்தும்…?

      எனக்குத் தான் ஒன்றும் தெரியவில்லை என்று
      சொல்லி விட்டீர்கள்….!!! சரி..ஏற்றுக்கொள்கிறேன்.

      எனவே, இவை யாருக்குப் பொருந்தும்
      என்பதையும் நீங்களே சொல்லி
      விடுங்களேன்…. 🙂 🙂 🙂

      விஷயத்தை பாதியிலேயே விடுவானேன்…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புது வசந்தம் சொல்கிறார்:

        இதை படிக்க படிக்க இந்திய அளவில் ஒரே ஒரு முகம் தான் நினைவில் வந்தது. பாவம், நண்பர் தமிழ்நாட்டு எல்லையை தாண்டவில்லை. இதற்கு, பின்னுட்டமாக கொஞ்சம் நீளமான பதிவை எழுதினேன். சில தவறுகளால் (Copy+paste) அதை இழந்து விட்டேன். பின்னர் எழுதி பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.

      • புதியவன் சொல்கிறார்:

        //இதுவரை வரலாற்றில் நிகழாத சந்திப்புகளையெல்லாம் நிகழ்த்திவிட்டால் அதைவைத்து பெரிய அளவில் அரசியல் செய்யலாம்//

        பாருங்க கா.மை சார்… இவ்வளவு க்ளூ கொடுத்தும் என்னால் கண்டுபிடிக்க முடியலை. 🙂 என் ஞாபகத்துக்கு வருவது,

        பைலட்டாக இருந்த ராஜீவ் காந்தி அம்மா மறைந்த உடன் பொறுப்பேற்றதும், அவசர அவசரமாக ஏகப்பட்ட பிரச்சனைகளை உடனே தீர்க்கறேன் என்று கத்துக்குட்டித்தனமாக எல்லாப் பிரச்சனையிலும் மூக்கை நுழைத்து கடைசியில் தான் செய்த அந்த மாதிரிச் செயலாலேயே வாழ்வை இழக்க நேர்ந்ததுதான் நினைவுக்கு வருது.

        நம்ம ஊரில், மோடி சீன அதிபரைச் சந்தித்தார், தெற்காசியாவுக்குப் பயணம் செய்தார் என்பதையெல்லாம் வைத்து யாராவது வாக்களிப்பாங்களா? அதை வைத்து நெகடிவ் அரசியல்தானே நிறைய நடக்குது. கொஞ்சம் பொருத்தமாச் சொல்லவேண்டாமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.