என்றோ அனுபவித்தது …..!!!


3-4 வயதுப் பெண் குழந்தையொன்று.
அந்தச் சிறுமிக்கு, பல நல்ல பழக்க வழக்கங்களை
சொல்லிக் கொடுத்து ஆசையாக வளர்த்திருந்தார்கள்
பெரியவர்கள் …

ஒரு நாள், பூஜை முடிந்த பின், தாத்தா கொடுத்த
2 ஆப்பிள்களுடன் அந்தச் சிறுமி வெளியே
ஹாலுக்கு வருகிறாள்.

அங்கே வீட்டிற்கு வந்த 2 தெரிந்த மனிதர்களுடன்
அந்தச் சிறுமியின் அப்பா பேசிக்கொண்டிருந்தார்.
வந்திருந்தவர்களில் ஒருவர் விளையாட்டாக
அந்தச் சிறுமியிடம் “நீ தான் 2 ஆப்பிள் வைத்திருக்கிறாயே
எனக்கு ஒன்று தாயேன்” என்று கேட்கிறார்.

ஒரு நிமிடம் அவரைப் பார்க்கிறாள் சிறுமி…
கொஞ்சம் யோசிக்கிறாள்…
பதிலேதும் பேசாமல், சட்டென்று
ஒரு ஆப்பிளை சிறிது கடிக்கிறாள்.

வந்தவர் முகம் சற்று மாறுகிறது…
தொடர்ந்து 2-வது ஆப்பிளையும் சிறிது கடிக்கிறாள்
அந்தச் சிறுமி.

அந்த சிறுமியின் நடத்தையைப் பார்த்து,
அவளது அப்பாவின் முகம் சிறுத்துப் போகிறது.

அவர் அந்தச் சிறுமியிடம்
ஏதோ சொல்ல முற்படுகிறார்…

அதற்குள்ளாக அந்தச் சிறுமி 2-வதாக கடித்த ஆப்பிளை
வந்தவரிடம் நீட்டி, ” இந்தாங்க அங்கிள் – இதுதான்
நல்லா, ஸ்வீட்டா இருக்கு” என்கிறாள்…

கூடவே சொல்கிறாள்-

” எப்பவும் நம்ம கிட்ட இருக்கறதுல பெஸ்டை’த்தானே
மத்தவங்களுக்கு கொடுக்கணும்……”

சின்னக் குழந்தைகள் – கள்ளம் அறியாதவர்கள்….
சொல்லிக் கொடுக்கும் எதையும் அப்படியே
பிடித்துக் கொள்பவர்கள்…

அவளுக்கு சொல்லப்பட்ட ராமாயண சபரி’யின்
கேரக்டரை அவள் மறக்கவில்லை…

ஆனால், அந்த பெரியவர்கள் மறந்து விட்டார்கள்…
தங்கள் கண்ணோட்டத்திலேயே
குழந்தையின் செயலையும் பார்க்கிறார்கள்.

பல சமயங்களில் …. குழந்தைகள் நம்மை விட
மேலானவர்கள் – இல்லையா ..!!!

.
————————————————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to என்றோ அனுபவித்தது …..!!!

 1. R KARTHIK சொல்கிறார்:

  உண்மை.

  பல நேரங்களில் குழந்தைகளிடம் நாம் தோற்கிறோம்.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  // குழந்தைகள் நம்மை விட
  மேலானவர்கள் – இல்லையா ..!!! //

  சந்தேகமே இல்லை.
  அவர்கள் ஒரு க்ளீன் ஸ்லேட் .
  அதில் நாம் எதை வேண்டுமானாலும் எழுதலாம்; பதியலாம்.
  அதனால் நாம் தான் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

 3. புதியவன் சொல்கிறார்:

  நம் மனதில் உள்ள கள்ளத்தனம், பொல்லாத்தனம் போன்றவைதான் பிறரைத் தவறாக ஜட்ஜ் செய்யக் காரணமாகிறது. இதனை நான் பல முறை அனுபவித்திருக்கிறேன். ஒருவர் செய்வது எனக்குத் தவறாகவும் உள்நோக்கமுடையதாகவும் தோன்றும்..அதுவே என் கூட இருப்பவருக்கு தவறில்லாததாகத் தோன்றும்.

  வளர வளரத்தான் நாம் மனதில் குறுகிவிடுகிறோமோ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   குழந்தைகள் நிஜமாகவே
   பச்சைக் களிமண் போலத்தான் –
   நண்பர் சொன்னது போல,
   க்ளீன் ஸ்லேட்டாகத் தான் இருக்கின்றன.

   நாம் என்ன விதைக்கிறோமோ, அவர்கள்
   நம்மை எப்படி பார்க்கிறார்களோ – அது தான்
   அவர்களுக்கான அடிப்படையாக அமைகிறது.

   குழந்தைகள் நல்ல மனிதராக உருவெடுக்க
   வேண்டுமானால், தாங்கள் அதற்கான
   முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
   என்பதை தாய்/தந்தையர்,
   புரிந்து கொள்ள வேண்டும்.

   என் குழந்தைகளுக்கு 10,12 வயதாகும்போது,
   அவர்கள் தங்கள் அப்பாவை ஹீரோவாக
   நினைத்ததை பார்த்தபோது இது எனக்கு
   நன்றாகவே உரைத்தது….அவர்கள் வளர்ந்த பிறகு
   அந்த இமேஜ் மாறி விடக்கூடாதே என்று
   நான் கவலைப்பட்டேன்.

   அதை நினைத்தே – என்னிடமிருந்த ஒரே ஒரு கெட்ட
   பழக்கத்தை, சிகரெட் பழக்கத்தை விட்டொழித்தேன்.

   எனவே, நான் 100 % சுத்தமான மனிதனாக
   மாறியதற்கு – அவர்களையும் அறியாமலேயே
   என் குழந்தைகள் தான் காரணமாக
   இருந்திருக்கிறார்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Rajagopalan சொல்கிறார்:

  The child in the photograph looks
  very smart and at the same time innocent also –
  a rare combination. God Bless her.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s