உலகைப் புரிஞ்சுகிட்டேன்… கண்மணி…


அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட
உதவ மாட்டார்கள் என்பது பழகிய மொழி.

அதை மிஞ்சும் விதமாக, கொரோனா வைரசும், அது
உண்டாக்கிய விபரீதங்களும், ஊரடங்கு உத்திரவுகளும்
ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் –
இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே -கற்றுக்
கொடுத்திருக்கும் பாடங்கள் …. அற்புதமானவை.

வேதங்களும், சாஸ்திரங்களும், மதப்பெரியோர்களும்
எவ்வளவு தான் சொல்லிக் கொடுத்தாலும் –

மண்டையில் ஏறாத –
ஏற்றிக்கொள்ளாத – மனிதர்களுக்கு
இப்போது நிஜ வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் –
ஈடு, இணை இல்லாதது…!!!

சமூக வலைத்தளங்களில் பரவலாக
உலவி வரும் “அறிவுத் தெளிவுகள்…”

1. அமெரிக்கா ஒரு முன்னணி நாடு
என்கிற நினைப்பே தவறு…
வெறும் பிரமை.

2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.

3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.
ஆனால் – நாம் நினைக்கும் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல.

4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல்
நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.

5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களின்
சராசரியை விட மிக அதிகம்.

6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி,
மௌலவி, மதகுருமார்கள், சாமியார்கள் ஆகியோரால் –
ஒரு நோயாளியைக் கூட காப்பாற்ற முடியாது.

7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர்,
நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் …
திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், மற்றும்
கால்பந்து வீரர்கள் அல்ல.

8. தங்கம், மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற
எரிபொருட்களுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில்
எந்த முக்கியத்துவமும் இல்லை.

9. இந்த உலகம் தங்களுக்கும் சொந்தமானது என்று
விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.

10. அபூர்வமாக – வளர்பிறை சந்திரனையும்,
வானில் மின்னும் நட்சத்திரக்கூட்டங்களையும் –
-பெருநகரங்களின் குழந்தைகள் முதல் தடவையாக
பார்த்து அனுபவிக்கிறார்கள்…..

11. உலகில் பெரிய அளவிற்கான மக்கள் தங்கள் வேலையை
வீட்டிலிருந்தே கூட செய்யலாம்.

12. நாமும் நம் குழந்தைகளும் ‘பாஸ்ட் புட் ‘
இல்லாமல் கூட வாழ முடியும்….

13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது அப்படி ஒன்றும்
கடினமான காரியம் அல்ல.

14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும்
என்று ஒன்றும் ரூல் கிடையாது.

15. சமூக ஊடகம் என்பது –
பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.

(ஆனால்- இதில் விமரிசனம் தளம்
சேர்த்தி இல்லை என்பது நான் சொல்லாமலே
உங்களுக்குப் புரியும் … 🙂 🙂 )

16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே,
நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.

17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடுகள்
மீண்டும் கோயிலாக மாறும்.

18. பணத்திற்கு(கரன்சி) மதிப்பு குறைவே…
உணவுப் பொருட்கள், காய்கறி, ஆகியவையே
மதிப்பு மிக்கவை.

19. இந்தியப் பணக்காரர்கள் பலர் இரக்கம்,
நற்குணம் நிறைந்தவர்கள்.

20. எத்தகைய இக்கட்டான நேரத்தையும் இந்தியர்களால்
திறமையாக கையாள முடியும்.

21. ஒற்றைக் குடும்பத்தை விட – கூட்டுக் குடும்பம் சிறந்தது.

22. எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாக –

-சினிமா இல்லாமல்,

-டாஸ்மாக் இல்லாமல்,

– அரசியல் இல்லாமல் – கூட தமிழர்களால்
வாழ முடியும்…!!!!!!!!!!!!!!!!

————————-

இன்னும் விட்டுப் போனவை பல ….!!!
நண்பர்களுக்கு தோன்றினால், பின்னூட்டங்களில்
தெரிவிக்கலாம்…

.
————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to உலகைப் புரிஞ்சுகிட்டேன்… கண்மணி…

 1. ganesh சொல்கிறார்:

  சமூக ஊடகம் என்பது –
  பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.

  (ஆனால்- இதில் விமரிசனம் தளம்
  சேர்த்தி இல்லை என்பது நான் சொல்லாமலே
  உங்களுக்குப் புரியும் … 🙂 🙂 ) andha yeppa varuven nadigar pathina ungal seithigal neegalaaga…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s