லண்டனிலிருந்து – கல்கத்தா – தரை மார்க்கமாக – முடியுமா…?


…..
…..

……

2 நாட்களுக்கு முன்னர் டைம்ஸில் ஒரு செய்தி படித்தேன்…
தொடர்ந்து சென்று வலைத்தளத்தில் தேடியதில் அற்புதமான,
தகவல்கள் கிடைத்தன… நினைத்துப் பார்த்தால்
பிரமிப்பாக இருக்கிறது.

லண்டனிலிருந்து, ஒரு luxury bus மூலம் – தரை மார்க்கமாக,
பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்டிரியா, யுகோஸ்லேவியா,
பல்கேரியா, துருக்கி, இரான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான்,
இந்தியா – என்று போகிறது டூரிஸ்டுகள் பயணம் செய்யும்
இந்தப்பாதை.

கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், 1950-களில் துவங்கிய
இந்த பயணத்திட்டம் 1970 வரை நடந்திருக்கிறது.
ஆல்பர்ட் டிராவல்ஸ் என்கிற நிறுவனம் இதை நடத்திக்
கொண்டிருந்திருக்கிறது…

இந்தியாவில் – இந்த டூர் – கல்கத்தா, பனாரஸ்(காசி),
கங்கையில் படகுப் பயணம், அலஹாபாத், டெல்லி, ஆக்ரா
என்று பல முக்கிய இடங்களை உள்ளிட்டிருக்கிறது.

இந்த பஸ் பயணிகளுக்கு, ரேடியோ, பதிவுசெய்யப்பட்ட இசை,
படிப்பதற்கு நூலகம், தூங்குவதற்கு பங்கர் வசதி, ஃபேன்,
மற்றும் ஹீட்டர் வசதிகள்…ஆகிய அனைத்தும் செய்து
தரப்பட்டுள்ளன.

இந்தியாவைத்தவிர, டெஹ்ரான், சால்ஸ்பர்க், காபூல்,
இஸ்தான்புல், வியன்னா ஆகிய ஊர்களிலும் தங்கி
ஊர் சுற்றிப் பார்க்கும் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த பஸ்’ஸின் முதல் பயணம் லண்டனிலிருந்து
1957, ஏப்ரல் 15 அன்று துவங்கி, அதே ஆண்டு,
ஜூன் 5-ந்தேதி கல்கத்தா வந்தடைந்திருக்கிறது.

ஒரு வழிப்பயணத்திற்கு, லண்டனிலிருந்து-கல்கத்தா வரை
வந்து சேர 85 pound sterlings அதாவது அப்போதைய நிலையில்
இந்திய ரூபாய் 8,019/- வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த
கட்டணத்தில் உணவு மற்றும் தங்கும் வசதிகளும் அடங்கும்.

இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட
சில அந்த காலத்திய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் –

……………..
———————
பின்னர் கிடைத்து தனியே சேர்க்கப்பட்டது…

…..

…..

.
——————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to லண்டனிலிருந்து – கல்கத்தா – தரை மார்க்கமாக – முடியுமா…?

  1. Sasikumar சொல்கிறார்:

    Interesting news. thanks for sharing.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s